• Revolution Slider
  • Revolution Slider
  • Revolution Slider
  • Revolution Slider

அருள்மிகு பட்டீசுவரர் சுவாமி திருக்கோயில்

பேரூர்,கோயமுத்தூர்

திருக்கோயில்

    இறைவன் பட்டீசுவரசுவாமி,இறைவிக்குப் பச்சைநாயகி என்று தமிழிலும், மரகதவல்லி என்று வடமொழியிலும் திருப்பெயர்கள் வழங்கப்படுகிறது, சிவன்கோயில் என்றாலும் சிற்பங்களில் வைணவமும் ஏராளமாக இணைந்துள்ளது. ஆஞ்சநேயர், ஸ்ரீமாய கிருஷ்ணர் என்று அங்காங்கே தூண்களில் கலையுடன் சமய ஒற்றுமையும் சேர்ந்து மிளிர்கிறது.

     பேரூர் நகரின் வரலாற்றைப் பார்க்கையில், இக்கோயிலில் பலவிதக்கலைப்பாணிகளும் சங்கமித்துள்ளது அதிசயமில்லை என்று புரிகிறது. அகழ்வாராய்ச்சிகளின் போது ரோமானிய நாணயங்கள் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது கி.மு. காலத்தில் தோன்றிய ஊர். பின்னர் கி.பி.ஏழாம் நூற்றாண்டு வரை, பல்லவர்கள், சேர, சோழ ஆதிக்கம், கொங்கு, பாண்டியர் ஆட்சி, விஜய நகர அரசர்களின் கட்டுப்பாடு, மதுரை நாயக்கர்களின் அதிகாரம், இறுதியாக மைசூர் மன்னர்களின் அரசாங்கம் - என்று தென்னாட்டில் முக்கிய வம்சத்து அரசரகளின் கொடி நாட்டிய இடம் இப்பகுதி.

     ‘ஆரூரார் பேரூரார்’ என்றும் ‘பேரூர் பிரமபுரம் பேராவூரும்’ என்றும் அப்பர் சுவாமிகள் தனது சேஷத்திரக்கோவையில் இரண்டிடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். எனவே சுமார் கி.பி. 650க்கு முன்னரே பேரூர் பட்டிசுவரர் ஆலயம் கட்டப்பட்டிருக்க வேண்டும். பேரூர் பற்றிய தனித்தேவாரம் மறைந்து போய் விட்டதாகக் கருதப்படுகிறது.

ஸ்தல பெருமை

    சிவ லிங்கத்தின் தலையில்,காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம்.சன்னதி விமானத்தில் எட்டு திசை காவலர்களின் உருவங்கள் அமைந்துள்ளன.அம்மன் பச்சைநாயகி சன்னதி விமானம் சதுரமாக அமைந்துள்ளது.மற்றொரு அம்பிகையான மனோன்மணிக்கும் சன்னதி இருக்கிறது.சோமாஸ்கந்த வடிவில்,சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் அருள்பாலிக்கிறார்.

    முக்தி தலம் என்பதால் நாய் வாகனம் இல்லாத ஞான பைரவர் இங்கு அருள் செய்கிறார்.அம்மன் சன்னதிக்கு வெளியே வரதராஜப் பெருமாளும்,பிரகாரத்தில் மரத்தில் உருவான பெரிய ஆஞ்சநேயரும் அருளுகின்றனர்.

    இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள்.ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார்.இங்குள்ள பனைமரம் "இறவாப்பனை" எனப்படுகிறது.இங்கு தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்று பொருள்.

    நொய்யல் நதிக்கரையில் உள்ள பட்டி விநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.

கோயில் கட்டிடக்கலை

    இந்த கோயிலில் நடராஜர் தங்க சிலை புகழ் பெற்ற ஒன்றாகும்,பல கோபுரங்கள், அரங்குகள்,தூண்கள் மற்றும் சிவன் அவதார சிற்பங்கள் மற்றும் கல் சங்கிலிகள் உள்ளது.

    இக்கோயில் கரிகால சோழனால் கட்டப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இக்கோயிலுக்கு வருகை புரிந்து தேவாரப் பாடல்கள் பாடியிருக்கிறார். பிற்காலதில் சோழ பேரரசன் ராஜ ராஜ சோழன் ஆட்சியில் இக்கோயிலில் அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு, கோயிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு நன்கொடைகள் அங்குள்ள சுவர்களில் ஆவணப்படுத்தப்பட்டன. பின்னர் பதினேழாம் நூற்றாண்டு வரை போசளப் பேரரசு, விஜயநகரப் பேரரசு மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சியின் கீழ் பல்வேறு நன்கொடைகள் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டு வந்துள்ளன.

    இக்கோயிலின் கனக சபை பதினேழாம் நூற்றாண்டில் அழகாத்ரி நாயக்கரால் கட்டப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் 63 நாயன்மார்களைக் கொண்ட மண்டபம் கட்டப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் கல்யாண மண்டபம் மற்றும் முன் மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு விமானமும் செப்பனிடப்பட்டது.